போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு எடுத்துள்ள முக்கிய முடிவு
ஹமாஸுடன் (Hamas) போர் நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வர ரோம் நகருக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Nethanyahu) தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை அவர் அமெரிக்காவின் (America) புளோரிடா (Florida) நகரில் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்த போது வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு முந்தைய நாள் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) ஆகியோரை சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
கமலா ஹரிஸின் கருத்து
அத்துடன், இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா ஹமாஸுடனான மோதல் விவகாரத்தில் இறுதித் தீர்மானத்தை எட்டும் தருவாயில் இருப்பதாக பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் தொடர்பில் அமைதி காக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன மக்களை துன்பத்தில் இருந்து விடுவித்து போரை நிறைவு செய்ய வேண்டும் எனவும் ஹரிஸ் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப்பின் கருத்து
அதேவேளை, ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது இஸ்ரேல் இராணுவம் மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் போர் நிறுத்த உடன்படிக்கையை விரும்புவதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தேர்தலில் தான் ஜனாதிபதியாக தெரிவானால் அமைதியை உருவாக்க கடமைப்படுவேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளதோடு கமலா ஹரிஸின் கருத்து இஸ்ரேலை அவமதிக்கும் விதமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri