ரணில் - டக்ளஸ் கூட்டமைப்பினர் ஏமாற்றிவிட்டனர்: அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம்
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றிவிட்டார் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆகியோரும் கறிவேப்பிலைகளாக பயன்படுத்தி விட்டு கைவிட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை - காரைதீவு பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று(26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தேர்தல்களில் யாரை ஆதரிப்பது? என்பது கேள்விக்குறியாக நீடிக்கின்றது.
ஏனென்றால் எமது நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்னமும் பேரம் பேசும் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிற்சங்கங்களுக்கு கிடைப்பதாக இல்லை.
வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தலைமைகள் தேர்தல் வெற்றிகளுக்காக மாத்திரம் எம்மை பயன்படுத்தி விட்டு நட்டாற்றில் கை விட்டு சென்றிருக்கின்றனர் என்பதே வரலாறு.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மலையகத்தின் உழைக்கும் தோட்ட தொழிலாளர் வர்க்கம் பாரிய அரசியல் சக்தியாக மாறி அவர்களின் உரிமைகளை வென்றெடுத்துள்ளது.
எனவே வடக்கு, கிழக்கை சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது? நாம் பேரம் பேசும் சக்தியாக எழுச்சி பெற வேண்டும்.
அரசாங்க அதிபர் தொடக்கம் அலுவலக பணியாளர்கள் வரை அரசாங்க ஊழியர்கள்தான்.
மலையகத்தில் ஏற்பட்ட பேரெழுச்சி எமது அரசாங்க ஊழியர்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
