மூன்று தமிழர்களிடம் சிக்கிய அநுர வீட்டின் வரை படம் - சுற்றிவளைக்கப்படும் கருணாவின் போராளிகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்வதற்கு திட்டம் தீப்பட்டிருப்பதாக இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினர் அஜித் தர்மபால முன்னரே பகிர்ந்து கொண்டிருந்தார்.
இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளிவரும் சூழ்நிலையில், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையானது நாட்டின் சட்ட ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்துகின்றது.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினராக வேடமணிந்து அங்கு உள்நுழைந்து தற்கொலை தாக்குதல் நடத்த தயாரான நிலையில், கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கருணாவின் தரப்பை சேர்ந்த முன்னாள் போராளிகள் என அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் போது அவர்களிடம் இருந்த ஒரு வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது அநுரவின் வீட்டு வரைபடமாக இருக்கலாம் என அஜித் தர்மபால சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் பாதுகாப்பு, கடந்த ஒன்று இரண்டு மாதங்களாக வழமைக்கு மாறாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |