யாழில் 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
யாழில், பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று இன்றையதினம் (29.10.2025) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை 23.07.2025 அன்று பிறந்துள்ளது. இன்றையதினம் தாயார் குறித்த குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் சிறிது நேரத்தில் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்த நிலையில் குழந்தை மயங்கியது.
உடற்கூற்று பரிசோதனைகள்
பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |