சுவிஸ் உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகள் இலங்கையில் ஆரம்பம்
சுவிஸ் விமான நிறுவனமான எடெல்வைஸ், பெலாருஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பெலாருஷ்யன் ஏர்லைன்ஸ் மற்றும் ரஷ்ய விமான நிறுவனமான ரெட் விங்ஸ் ஆகியவை நேற்று முதல் இலங்கைக்கான சேவைகளைத் ஆரம்பித்துள்ளன.
எடெல்வைஸ் 257 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அதன் குளிர்கால விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
நேற்று முதல் சேவையில்..
402 பயணிகளுடன் ரெட் விங்ஸ் மற்றும் 277 வெளிநாட்டு விருந்தினர்களுடன் பெலாவியா ஆகியவை ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கின. பெலாவியா கிழக்கு ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கிறது.

இதற்கிடையில், ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் மத்தள விமான நிலையத்திற்கு அதன் குளிர்கால விமான சேவையை தொடங்கியது. திட்டமிடப்பட்ட மற்றும் பயணிகள் போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்ற பத்து பெரிய ரஷ்ய விமான நிறுவனங்களில் இந்த விமான நிறுவனமும் ஒன்றாகும்.
இது மத்தள விமான நிலையத்திற்கு வாரத்தில் ஆறு (06) விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. ரெட் விங்ஸ் நிறுவனம் குளிர்காலத்தில் மத்தளவுக்கு சுமார் 130 விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri