கொடிகாமத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (29) அதிகாலை 3 மணியளவில் கிளாலிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பொலிஸார் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அண்மைக்காலமாக அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தப்பியோட முயற்சி
இந்த நிலையில் தான் கடந்த வாரம் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி பொலிஸாருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய உழவு இயந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ் .பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை குறித்த பகுதிகளில் விசேட சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரைக் கைது செய்துமுள்ளனர் அதேவேளை ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam