முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலனுக்கு நேர்ந்த கதி
தனது முன்னாள் பல்கலைக்கழக காதலியின் அந்தரங்க புகைப்படங்களை தற்போதைய காதலனுக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட பேராதனை பகுதியை சேர்ந்த இளைஞனை பிணையில் விடுவிக்க கல்கமுவ நீதவான் ரவிந்து ரஞ்சன் பண்டார உத்தரவிட்டார்.
சந்தேக நபரை தலா 200,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணை
மேலும் வழக்கு விசாரணையிலோ அல்லது சம்பவம் தொடர்பான விசாரணைகளிலோ எந்த வகையிலும் தலையிடக்கூடாது என சந்தேக நபருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கல்கமுவ, பலுகடவல பகுதியில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவி ஒருவர், வடமேற்கு கணினி குற்ற விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வடமேற்கு மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவு வாரியபொல அதிகாரிகள், சந்தேக நபர் தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வட்ஸ்அப் மூலம் தனது புதிய காதலன் என்று நம்பப்படும் ஒருவருக்கு அனுப்பியதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால், சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
பல்கலைக்கழக மாணவி
எனினும் சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி ரந்துனு சேனாரத்ன, தனது கட்சிக்காரரும், பல்கலைக்கழக மாணவியுமான முறைப்பாட்டாளர் மூன்று வருடங்களாக காதல் உறவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களின் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த பழிவாங்கும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கட்சிக்காரர் மற்ற காதலனுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் அந்தரங்க புகைப்படங்களை குறித்த பெண்ணே தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி அனுப்பியதாக வழக்கறிஞர் வலியுறுத்தினார்.