போலி காசோலையை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது
மோசடியான முறையில் போலி காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு வாகனமொன்றை ஒருவர் வாங்கியுள்ளார்.
அதற்குரிய காசோலையை வழங்கியபோது, வங்கியில் பணம் இல்லாமையால் அது திரும்பியுள்ளது. வாகனத்துக்குரிய பணத்தை கேட்டபோது விரைவில் அதனைத் தருவதாக் கூறி ஏமாற்றிவிட்டு, வாகனத்துடன் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
குற்றவிசாரணைப் பிரிவில் முறைப்பாடு
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாவிட்டபுரத்தில் மேற்படி வாகனம் மின் ஒழுக்கு காரணமாக எரிந்துள்ளது. இதனால் வாகனத்தோடு தலைமறைவானவர் பற்றிய விவரங்கள் வெளியாகின.
வாகனத்தை வாங்கியவர் நீண்ட காலமாக ஏமாற்றி தலைமறைவாகியதையடுத்து வாகனத்தை விற்றவர் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தினர். இதன்போது அவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
