இலங்கையை அலங்கரிக்கும் புதிய வகை பறவைகள்(Video)
திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்தில் புதிய வகை ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் அதிகளவில் நடமாடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.
காலநிலை மாற்றத்தினால் இந்த பறவைகள் வருகை தந்திருக்கலாம் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய வகை பறவைகள்
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியினூடாக செல்லும் வழியில் மஹதிவுல்வெவ குளம் அமைந்துள்ளது.
இக்குளத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் சுற்றித் திரிவதனால் பார்ப்பதற்கும் அழகாக அக்குளம் காட்சியளிக்கிறது.
அனைவரையும் ஈர்க்கும் காட்சிகள்
இந்த பறவைகள் ஒரே நேரத்தில்,பல முறைகளில் வட்டமாகவும் நீண்ட வரிசையிலும் நின்று கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
வீதியால் செல்பவர்களை பார்க்கத் தூண்டும் வகையில் மிகவும் அழகான முறையில் இந்த பறவைகள் செயல்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் வெளிநாட்டு நாரை வகை பறவைகள்
இதேவேளை, அண்மை நாட்களாக யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொண்டமனாறு நீரேரியில் இவ்வாாறு வெளிநாட்டு நாரை வகை பறவைகள் அதிகளவில் வந்திருப்பதை காாணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நாரை வகை பறவைகள் வெளிநாடுகளிலிருந்து காலநிலை மாற்றம் காரணமாக இலங்கைக்கு படையெடுத்து வந்திருப்பதாகவும், சுமார் ஆறுமாதங்கள் வரை இவை இங்கு வாழ்ந்து வருகின்றதாக சுட்டுக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யாழில் பார்ப்போர் கண்களை கொள்ளை கொாள்ளும் வெளிநாட்டு பறவைகள் (Video) |













எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
