யாழில் பார்ப்போர் கண்களை கொள்ளை கொாள்ளும் வெளிநாட்டு பறவைகள் (Video)
காலநிலை மாற்றத்தால் உலகிலுள்ள பறவைகள் சில தனது இருப்பிடத்தை விட்டு வேறுநாடுகளுக்கு இடம்பெயர்வது வழக்கமாகும்.
இலங்கையில் நிலவும் மிதமான காலநிலை காரணத்தால் வெளிநாட்டு பறவைகள் பல இங்கு வருகை தருவதை காண முடிகின்றது.
இதற்கமைய, அண்மை நாட்களாக யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொண்டமனாறு நீரேரியிலேயே இவ்வாாறு வெளிநாட்டு நாரை வகை பறவைகள் அதிகளவில் வந்திருப்பதை காாணக்கூடியதாக இருக்கின்றது.
காலநிலை மாற்றம்
இந்த நாரை வகை பறவைகள் வெளிநாடுகளிலிருந்து காலநிலை மாற்றம் காரணமாக இலங்கைக்கு படையெடுத்து வந்திருப்பதாகவும், சுமார் ஆறுமாதங்கள் வரை இவை இங்கு வாழ்ந்து வருகின்றதாக சுட்டுக்காட்டப்படுகின்றது.
பாதசாரிகளை ஈர்க்கும் பறவைகள்
இந்த பறவைகள் வீதியால் செல்பவர்களை சில நிமிடங்கள் நின்று பார்க்கத் தூண்டும் வகையில் மிகவும் அழகு மிகுந்தவையாக காணப்படுகின்றன.
இந்த பறவைகள் சுமார் ஆறு மாதங்கள் வரை இலங்கையில் வாழ்ந்துவிட்டு மீண்டும் தமது இருப்பிடத்துக்கு திரும்புவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.



