கடவத்தை நகரில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்! சேதங்கள் குறித்து வெளியான விபரம்
கடவத்தை நகரின் மத்தியில் அமைந்திருந்த வர்த்தக நிறுவனம் ஒன்று நள்ளிரவில் இடம்பெற்ற தீ விபத்தின் காரணமாக எரிந்து நாசமாகியுள்ளது.
கடவத்தை நகரின் மத்தியில் அமைந்திருந்த மூன்று மாடிகளைக் கொண்ட வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டவுடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாநகர சபைகளின் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்துவதில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

அத்துடன் கடவத்தை எல்தெனிய பிரதேச விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த படையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பொதுமக்களை பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் கொழும்பு-கண்டி வீதியால் பயணித்த வாகனங்கள் கடவத்தை நகரை விட்டு மாற்றுப் பாதைகளில் செல்லவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam