நாளை முதல் மின்வெட்டில் மாற்றம்
நாளை (27) முதல் ஜூலை 3ஆம் திகதி வரை 3 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) இதனை அறிவித்துள்ளது.
நேர விபரங்கள் அறிவிப்பு
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு நண்பகல் வேலையில் இரண்டு மணி நேரம் மற்றும் நாற்பது நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
குறித்த பிரிவுகளில் மீண்டும் மாலை வேலையில், ஒரு மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு மாநகரப் பகுதியில் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை, M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு எதிர்வரும் ஜுலை 2 மற்றும் 3ஆம் திகதிகளை தவிர்த்து காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 44 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
