யாழில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்
யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(12.05.2024) இரவு யாழ். இலுப்பையடிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
யாழ். நாவலர் வீதியால் வருகை தந்த கார் இழுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்ட நிலையில், யாழ். பலாலி வீதியூடாக புன்னாலைக் கட்டுவன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் கால்கள் முறிவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை(Teaching Hospital Jaffna)அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan