கிளிநொச்சியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று (12.05.2024) இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
இதன்போது, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் விட்டு ஒருவர் தப்பி சென்றுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து வீதியல் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து 260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் இரண்டு சந்தேகங்களுடன் மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நாளை (13) நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri