ஜூலையில் மின்சாரக் கட்டண திருத்தம் : மழையும் செல்வாக்கு செலுத்தும்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும், மின்சாரக்கட்டண திருத்தத்தின்கீழ் அடுத்த திருத்தம், எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ(Manjula Fernando) தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தை பொறுத்து கட்டண திருத்தம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணத் திருத்தம்
இலங்கை மின்சார சபை தனது கட்டணத் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பல்வேறு மாகாணங்களில் அவ்வப்போது பெய்யும் மழையை காரணிப்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண திருத்தம் தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகளும். பரிசீலிக்கப்படும் என்றும் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இதேவேளை தென்மேற்கு பருவமழை மே 25ம் திகதி ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |