அதிகரித்துள்ள போர் பதற்ற சூழலில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்கு தல் நடத்தியது.
இந்நிலையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் மேலும் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவக் கோட்பாடு
இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் கமல் கர்ராசி தெரிவித்துள்ளதாவது, அணுகுண்டை உருவாக்குவது குறித்து எங்களிடம் எந்த முடிவும் இல்லை. அணுஆயுதங்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.
உலக வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருகிறது என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
