96 வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு - பொலிஸார் தீவிர நடவடிக்கை
இராமநாதபுரம் - உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(12.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தல் பொருட்கள் கடத்த இருப்பதாக இராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவ மணிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரவி செனவிரத்ன - ஷானியிடம் முதலில் விசாரிக்க வேண்டும்! துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தல்
40 லட்சம் பெறுமதியான வலி நிவாரணிகள்
இதன்போது, அரியமான் கடற்கரை அருகே இருந்த தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அட்டைப் பெட்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அதில், 8 பெட்டிகளில் சுமார் இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றிய கியூ பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அந்த தோப்பின் உரிமையாளர் யார் என்பது குறித்து அப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகுகள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? என கடற்கரை ஓரம் க்யூ பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

