மோட்டார் சைக்கிள் மோதி 91 வயது மூதாட்டி மரணம்
கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் வீதி விபத்தில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று (17.05.2025) ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னர் வீதியில் பயணித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமைடைந்த மூதாட்டி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
