முல்லைத்தீவில் கடும் மழை காரணமாக நிலக்கடலை செய்கை பாதிப்பு
தற்போது பெய்த மழை காரணமாக நிலக்கடலை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நிலக்கடலை செய்கை விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள் சுதந்திரபுரம் பகுதி சிறுதானி பயிர் செய்கையில் அதிகளவான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் சுமார் 400 ஏக்கர் வரையில் விவசாயிகள் நிலக்கடலை செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
அறுவடை
இந்த நிலையில், நிலக்கடலை அறுவடை செய்து காயவைத்து பிரித்து எடுப்பதற்காக காத்திருந்த வேளை நேற்று இரவு பெய்த கடும் மழையினால் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக நிலக்கடலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த இரண்டாம் மாதம் அளவில் நிலக்கடலை விதைப்பினை மேற்கொண்ட விவசாயிகள் அப்போதைய காலத்திலம் மழையினால் அழிவினை சந்தித்துள்ளதுடன் தற்போது நிலக்கடலையினை மரத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நடவடிக்கைக்காக வெய்யிலில் காயவைத்த வேளை மழைபெய்து பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.
தற்போது நிலக்கடலை 50 கிலோ 30 ஆயிரம் வரை விற்பையாகி வருகின்றது. இவ்வாறு சுமார் 50 தொடக்கம் 75 ஏக்கர் வரையான நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு வெய்யிலில் காயவிடப்பட்ட நிலையில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரபுரம் கமக்கார அமைப்பினர் தெரிவித்துள்ளர்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



