2009 இன் இறுதி யுத்த ஆதாரத்தை கேட்டு ஆபத்தில் சிக்கப் போகும் அநுர அரசாங்கம்!
2009 ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டனர்.
இறுதி போரின் போது, பலர் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் சிலர் கை, கால் என தமது உடல் அவயவங்களை இழந்தனர்.
16 வருடங்கள் இந்த வலிகளுடன் வாழும் மக்கள், போரில் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை வேண்டி இன்றும் வீதியில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த வேதனைகள், தமிழர்கள் மீதான அடக்குமுறை மூலம் மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இவ்வாறு அரசாங்கத்தின் தீர்வுக்காக போராடும் மக்களின் மன குமுறல்களையும் வேதனைகளையும் பொருட்படுத்தாத இலங்கை அரசாங்கம், தமது நாட்டில் இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சாதிக்க போராடுகின்றார்கள்.
இலங்கை தமிழர்கள் தமது உயிர்நீத்த உறவுகளின் 16 ஆவது நினைவுதினத்தை நாளை(18.05.2025) அனுஷ்டிக்கவிருக்கும் நிலையில், 2009 இன் இறுதி யுத்த ஆதாரத்தை கேட்டு ஆபத்தில் சிக்கப் போகும் அநுர அரசாங்கம் பற்றி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam