சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது
நுவரெலியா - மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்ததோடு, மாணிக்கக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் நீதவான்
இந்நிலையில், சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலும், இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan