கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்க புதிய திட்டம்
புதிய இணைப்பு
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிக்கும் வசதியுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கைகள் இன்று (27.1.2024) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்றதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு
இந்த சோதனையின் போது 159 கிராம் ஹெரோயின் 112 கிராம் ஐஸ் மற்றும் 329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |