தலிபான் அமைப்பினர் பெண்களுக்கு விதித்த 8 தடைகள்
ஆப்கானிஸ்தான் பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கும் தலிபான் அமைப்பினர் தடைவிதித்துள்ளனர்.
அத்துடன் பெண் செய்தியாளர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை படைக்கும் பெண்கள் தொலைக்காட்சியில் தோன்றும் போது, தலையை மூடியிருக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ள 8 சட்ட விதிகளில் இவை அடங்கியுள்ளன. ஷரியா சட்டத்திற்கு முரணாக திரைப்பட்டங்களை படமாக்கவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
வெளிநாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்கள் மாத்திரமல்லாது இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையிலான நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.