இலங்கைக்கு வரவுள்ள 50 வெளிநாட்டு சொகுசு கப்பல்கள்
சீன சொகுசு பயணிகள் கப்பல்கள் 50 பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த தகவலை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரிபோ டீன் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாத்துறை வளர்ச்சி
இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாட்டிற்கு வரும் ஒரு சொகுசு பயணிகள் கப்பலில் சுமார் 1000 பயணிகள் வர உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஒரு கப்பல் இரண்டு நாட்களுக்கு இந்த நாட்டின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த சொகுசு பயணிகள் கப்பல் நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என நம்பப்படுகிறது.

மன்னாரில் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
