மன்னாரில் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கான கேள்விப் பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் குறித்த பகுதியில் 100 மெகாவாட் காற்றாலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய மின் நிலையங்கள்
காற்றாலை தவிர்த்து, மொத்தம் 165 மெகாவாற்றிறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்களை அமைச்சகம் அழைத்துள்ளது.

மேலும், நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri