போதைப்பொருள் வரத்தகர்கள் படுகொலை முயற்சி போலியானது: நீதிமன்றம் கடும் கண்டனம்
போதைப் பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான முயற்சி குறித்த தகவல் போலியானது என்று நீதிமன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தற்போதைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுப்புக்காவலில் இருக்கும் ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக, குடு சலிந்து எனப்படும் சலிந்து குணரத்தின ஆகியோரை தடுப்புக் காவலில் வைத்துப் படுகொலை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்களின் உறவினர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (20) விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட போது, அவ்வாறான சம்பவங்கள் குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை எனவும், சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சீசிடீவி கருவியை மீறி யாரும் அவர்களை நெருங்க முடியாது என்றும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
அதே நேரம்,நான் அண்மையில் அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட போதும் அவ்வாறான ஆதாரபூர்வமான தகவல் எதனையும் குறித்த போதைப்பொருள் வர்த்தகர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று கோட்டை மாஜிஸ்திரேட் திலிண கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், இது நீதிமன்றத்தின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கான போலி முறைப்பாடு திலிண கமகே என்றும் விமர்சித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri