மிகப்பெரிய நெருக்கடியில் இலங்கையின் பொருளாதாரம்! ஆபத்தில் அரச ஊழியர்களின் எதிர்காலம்..
அண்மைகாலமாக இலங்கை ரூபாவினுடைய பெறுமதி அமெரிக்க டொலருக்கு சார்பாக சற்று தேய்வடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தநிலைமை அமெரிக்க டொலரின் பெறுமதி ஏனைய நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக தேய்வடையும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை குறைத்து மதிப்பிட முடியாது, அதுவொரு வலுவான பொருளாதாரம். ஆட்சியாளர்களுடைய பிழையான கொள்ளை தெரிவுகள் மற்றும் தந்திரோபாயங்கள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததே தவிர அது விழுந்து விடகூடிய பொருளாதாரம் அல்ல.
ஆனால் தற்போது உள்ளகச்சூழல் சாதகமாக இருந்தாலும், வெளிச்சூழல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை.
இதேவேளை, அரசஊழியர்களின் சம்பள அதிகரிப்பு 2027 ஆம் ஆண்டுவரை அதிகரிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், மக்கள் கேட்பது சம்பள அதிகரிப்பை அல்ல, வாழ்க்கை செலவினுடைய குறைப்பை என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு..