பறிபோன சிறீதரனின் பதவி! சாணக்கியனை கொண்டாட அவசியமில்லை - சிறிநேசன் பதிலடி
ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது இதனைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை இது கொண்டாட வேண்டிய ஒரு விடயமும் இல்லை, என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(08.02.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பின கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
உண்மையில் பார்க்கின்ற போது சிறீதரனிடமிருந்து நாடாளுமன்ற குழு தலைவர் என்ற பொறுப்பை எமது கட்சியின் அரசியல் குழு தற்காலிகமாக இடைநிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தற்காலிகமாக கொடுத்திருக்கின்றது.
இதுதான் உண்மையாக நடந்த சம்பவம்.
இந்த சம்பவத்தின் பின்னர் பல இடங்களில் பதாகைகள் கட்டி தொங்க விடப்பட்டதையும், பட்டாசுகள் வெடித்ததையும், இனிப்புகள் கொடுத்ததைப் பற்றியும் ஊடகவியலாளர்கள் எம்மிடம் கேட்கின்றார்கள்.
அதாவது உங்கள் கட்சிக்குள் இருந்துதான் இந்த பதவிகள் பரிமாறப்பட்டிருக்கின்றபோது ஏன் பட்டாசு வெடிக்கச் செய்தார்கள், ஏன் இனிப்பு கொடுக்கிறார்கள், ஏன் பதாகைகள் தொங்க விட்டார்கள், என்ற கேள்விகளை ஊடகவியலாளர்கள் எங்கள் மீது தொடுக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan