யாழ்.பொன்னாலையில் விபத்து - ஒருவர் பலி
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று(9) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
காரைநகர் - சாவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த கிருஷ்ணராஜா சாரங்கன் என்ற 26 வயதுடைய உயிரிழந்த நிலையில், காரைநகர் - விக்காவில் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri