சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: எடுக்கப்பட உள்ள தீர்மானம்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05.10.2026) கூடவுள்ள எதிர்க்கட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடி வருகின்றனர்.

தற்போது நாங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வரைவு செய்துள்ளோம்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்கும் திகதி குறித்து நாளை நாங்கள் தீர்மானிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri