தமிழ் மக்களை இலக்கு வைக்கும் கொடூரச் சட்டம்: சிறீதரன் கடும் குற்றச்சாட்டு
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஆனந்தபுரம் வட்டார கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்பு இந்த சட்டத்தை நீக்க ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட போதிலும், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் இந்த சட்டம் நீக்கப்படவிலை; அரசியல் தீர்வு குறித்தும் அமைதி காத்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், பொலிஸாருக்கு மட்டுமின்றி இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் (CSD) சந்தேக நபர்களைக் கைது செய்யவும், விசாரணையின்றித் தடுப்பில் வைக்கவும் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுகின்றன.
கடுமையான சட்டங்கள்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நினைவேந்தல் சுடரேற்றிய பள்ளி மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு நிபந்தனை விதித்துள்ள போதிலும், அரசு அதைவிடக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர முயல்வது வஞ்சகமான செயலாகும்.

இப்புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan