மக்களின் பேராதரவால் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு புதிய காட்சி
தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா வழங்கும் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு கிடைத்துவரும் மக்களின் பேராதரவைத் தொடர்ந்து, புதிய காட்சி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை முன்னெடுத்துள்ளன.
போராட்டம் திரைப்படம்
போராட்டம்’ திரைப்படம் ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.

றீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ஒரு இளைஞனின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் பல்வேறு போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் பேராதரவு
இந்நிலையில், மக்களின் பேராதரவைத் தொடர்ந்து இன்று(4) இரவு 10.00 மணிக்கு புதிய காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு காட்சி Regal Cinemas திரையரங்கில் நடைபெறவுள்ளது.
மக்களின் பேராதரவு பெற்ற போராட்டம் கடந்த 2ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியானமை குறிப்டபிடத்தக்கது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri