அனோஜன் விடுதலை... உண்மையான வெற்றியாளர்கள் யார்! வெளியான முக்கிய தகவல்
அனோஜனின் முழுமையான விடுதலை என்பது ஒருவரின் தனிப்பட்ட முயற்சியால் மாத்திரம் சாத்தியமானதல்ல என்றும், பல தரப்பினரின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், அனோஜனின் விடுதலைக்காக ஆரம்பம் முதலே பல்வேறு போராட்டங்கள் மற்றும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம், ஜனாதிபதி, சவூதி அரேபியத் தூதரகம் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஊடாகவும் இந்த விவகாரம் உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லப்பட்டது.
அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கமும் சிறப்பான முறையில் செயற்பட்டது.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், அனோஜனின் விடுதலைக்கான பெருமை ஜனாதிபதி, அரசியல்வாதிகள் அல்லது சட்டத்தரணிகள் என ஒரு சிலருக்கு மாத்திரம் உரித்தானதல்ல எனவும், சாதாரண மக்கள், அரசியல் தரப்பினர், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பங்களிப்புகளும் இதில் முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நக்கிள்ஸ் பகுதியில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு மாதாந்த நிதியுதவி! அமைச்சு அதிரடி அறிவிப்பு
வாஷிங்டனில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமிடும் ஈரான்: சுட்டிக்காட்டும் அமெரிக்க உளவுத்துறை News Lankasri