முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு இலங்கை அணி அறிவிப்பு! பதும் நிசங்கவுக்கு முக்கிய நிபந்தனை
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கை அணி
இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் தலைமை தாங்கவுள்ளார். அதேவேளை, பதும் நிசங்க மருத்துவ அனுமதிக்கு உட்பட்டு அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
Here is the 16-member squad set to represent Sri Lanka in the upcoming Tri-Nation Series in Pakistan! 🇱🇰🏏 #SriLankaCricket https://t.co/rgJq3Uu1dl
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 4, 2026
அவர் மருத்துவ ரீதியாக விளையாடத் தகுதியானவர் என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அணியுடன் பாகிஸ்தான் பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் T20 தொடருக்குப் பின்னர் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை ஒருநாள் அணி வீரர்கள்
பதும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சஹன் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷானக, துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷண, சச்சிந்து கொலம்பகே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோரே இணைக்கப்பட்டுள்ளனர்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan