172 உயிர்கள்... ஒரே விமானி - ஒரு நொடியில் மாறிய விமானப் பயணம்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்
இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தின் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இடம்பெற்ற பரபரப்பான தாக்குதல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 30ஆம் திகதி டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தை இந்தியரான விமானி ஸ்மித் மச்சார் இயக்கியுள்ளார்.
பாரிய தொழில்நுட்பக் கோளாறு
சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, விமானத்தின் துணை விமானி தொழுகை செய்வதற்காக அனுமதி கோரியுள்ளார்.
விமானப் பயணங்களின்போது இது வழக்கமான விடயம் என விமானி தெரிவித்துள்ளார். எனினும், சில நிமிடங்களுக்குப் பின்னர் விமானியின் தலையில் திடீரென பலத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முதலில் விமானத்தில் பாரிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நினைத்ததாக தெரிவித்த விமானி, தொடர்ந்து தாக்கப்பட்ட பின்னரே தன்னை துணை விமானிதான் தாக்குவதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
விசாரணையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் தகவலின்படி, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 29 வயதான ஹமாம் அல் ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விமானக் கட்டுப்பாட்டு அறை
அவர் ஆயுதமொன்றைப் பயன்படுத்தி விமானியைத் தாக்கிய பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாகவும், விமானம் தாழ்வாகச் செல்லும் வகையில் இயக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்ததுடன், பார்வையும் மங்கியிருந்த போதிலும், விமானி தனது உயிரையும் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டுமெனில் விமானக் கட்டுப்பாட்டு அறையின் கதவை அடைய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார்.

“என்னிடம் இருந்த முழு சக்தியையும் பயன்படுத்தி கதவை நோக்கி சென்றேன்” என அவர் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
விமானி விமானக் கட்டுப்பாட்டு அறையின் கதவைத் திறக்க முடிந்ததைத் தொடர்ந்து, சில பயணிகள் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து நுழைந்து சந்தேகநபரை கட்டுப்படுத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யானிவ் ஹயூன் என்ற பயணி சந்தேகநபரை விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெளியேற்றியதுடன், ஆரம்பத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பயணிகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை கட்டுப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் கைது
இதனையடுத்து விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நோக்கித் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த விமானி பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானியுடன் தொலைபேசியில் உரையாடி, அவரது துணிச்சலான செயலைப் பாராட்டியதுடன், இஸ்ரேலுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டெல் அவிவுக்கான தனது விமான சேவைகளை ஃப்ளைதுபாய் நிறுவனம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan