தொடர்ச்சியாக அதிகரிக்கும் டெங்குநோய் அபாயம்! இதுவரையில் 78 மரணங்கள் பதிவு
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 100,871 ஆகும். இதன் இறப்பு விகிதம் 0.077 ஆகும்.
டெங்கு நோயாளிகள்
மேலும், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 52.45, அதாவது 52,906 நோயாளிகள், மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 21,377 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கூடுதலாக, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19,759 நோயாளிகளும், கண்டியிலிருந்து 7,689 நோயாளிகளும், களுத்துறையிலிருந்து 6,400 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 6,305 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
மாதாந்த தரவுகளைப் பார்க்கும்போது, ஒக்டோபர் மாதத்தின் கடந்த மூன்று நாட்களில் 151 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
பதிவான நோயாளிகள்
அதேசமயம் செப்டம்பர் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 5,230 ஆகும். ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளிகளும், ஒகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். தற்போது, 37 சுகாதார அத்தியட்சகர் பிரிவுகள் டெங்கு அதிக அபாய மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.