அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று (4) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இந்த அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு கையெழுத்துகள்
இதன்போது, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவு கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்படும் கையெழுத்துகளை ஜனாதிபதி ஊடாகவும், பல்வேறு அமைப்புகள் ஊடாகவும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் சமர்ப்பித்து, அனோஜனின் விடுதலைக்கு கோரிக்கை விடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பொதுமக்கள் தன்னார்வமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து அனோஜனுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்தும் கையெழுத்துகளை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்,
"அனோஜனின் விடுதலைக்காகக் கொழும்பில் வாழும் தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களின் ஆதரவை வேண்டியே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளது.
எனவே, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞரின் உயிரைக்
காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும்
திரண்டு வந்து ஆதரவு வழங்க வேண்டும்." - என்றார்.
மேலதிக தகவல் - ராகேஷ்



இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan