ஜனாதிபதியை திட்டி சமூக ஊடகத்தில் காணொளி வெளியிட்ட 5 பேர் கைது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை திட்டி சமூக ஊடகத்தில் காணொளி வெளியிட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தள தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகில் ஜனாதிபதியை இழிவான வார்த்தைகளால் திட்டி, சமூக ஊடகத்தில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
கட்டானை கந்தசூரிந்துகமவைச் சேர்ந்த ஐந்து பேரை கட்டானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி
அனுமதி வழங்க பொலிஸார் மறுத்ததையடுத்து
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது மத்தள அதிவேக நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட மற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொட்டாவை மற்றும் கடவத்த பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பதவியில் உள்ள ஜனாதிபதியை பொதுவெளியில் இழிவாக திட்டி ஒழுங்குக்கேடான முறையில் நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததே இந்த இடமாற்றங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி கதிர்காமம் வழிபாட்டில் கலந்து கொண்டு திரும்பிய தனியார் பேருந்தொன்றில் இருக்கைப் பட்டிகள் (seat belts) இல்லாத காரணத்தால் அதிவேக நெடுஞ்சாலைக்கு அனுமதி வழங்க பொலிஸார் மறுத்ததையடுத்து பதற்றமான நிலை ஏற்பட்டது.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த சிலர் ஜனாதிபதியின் பெயரை கூறியபடி இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதுடன், அதை கைப்பேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri