செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 46 சான்றுப்பொருட்கள் மீட்பு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 46 சான்றுப் பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டமாக 21 நாள்கள் (நேற்று வரை) இடம்பெற்ற அகழ்வில் 46 சான்றுப்பொருள்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அகழப்பட்டுள்ள பொருட்கள்

இதுவரை சிறுவர்களின் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை, காற்சங்கிலி, சிறு வளையல், இரும்புக் கட்டிகள், போத்தல், பாதணிகள், சிறுமிகளின் ஆடைகள், கற்கள், பிளாஸ்டிக் மாலை உள்ளிட்ட 46 சான்றுப்பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri