ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை
ஐக்கிய மக்கள் சக்தி சம்பந்தமாக தான் எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தாலும் அவை சரியான விதத்தில் நிறைவேறவில்லை என 43வது படையணி அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கற்றறிந்தவர்களுக்கு பொருத்தமான அரசியல் அமைப்பு அவசியம்

நாட்டில் தேசிய கலாசாரத்தை அடையாளம் கண்டுள்ள அரசியல் அமைப்பு தேவை. நாட்டில் கற்றறிந்த மனிதர்களுக்கு பொருத்தமான அரசியல் அமைப்பு அவசியம்.
புதிய தலைமுறைக்கு பொருத்தமான அரசியல் அமைப்பு தேவை என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு, அந்த எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தயாரில்லை

அந்த எதிர்பார்ப்பு அதேவிதத்தில் நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிய கூடியதாக இருக்கின்றது என்பதுடன் உணரக் கூடியதாக இருக்கின்றது.
இதனடிப்படையில், நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தயாரில்லை என்பதை கடிதம் மூலம் அறிவித்துள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கைகளின் அடிப்படை மற்றும் அவர்கள் உருவாக்கும் கூட்டணியின் செயற்பாடுகளை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தி எமக்கு எதிராக சக்தி அல்ல. எமக்கு நட்புறவான சக்தி எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam