திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 43 பேர்! வெளியான காரணம்
பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நேற்று(04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் பிரச்சினை
குறித்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிசாலையிருந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட இருபத்தைந்து பெண்களும், பதினெட்டு ஆண்களும் இச்சம்பவத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam