வெளிநாடொன்றில் சோகம் : 600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து
பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டிலுள்ள நிறுவனத்தின் பேருந்து காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில், வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பேருந்து மோதியுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் உயரும்
மோதிய வேகத்தில் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்துள்ள நிலையில் குறித்த பேருந்தில் 60 பேர் வரை பயணித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள் இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam