இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதில் எழுந்துள்ள சிக்கல்
இலங்கை மற்றும் பாகிஸ்ான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டித் தொடரை நடத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சில இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாதில் இடம்கஙெ்ங குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் மற்றும் இலங்கை விரர்கள் சிலர் தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் பல முறை கலந்துரையாடி, வீரர்களுக்கு உறுதியான பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து இன்னும் தயக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போதைய அணியினர் தொடரை முடிக்க மறுத்தால், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய மாற்று அணியை அனுப்பும் வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.