நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்! அறிவிப்புகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தல்
நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்களில் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத்துறை தெரிவித்துள்ளது.
இன்று (20) காலை 9.00 மணி நிலவரப்படி, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
வான்கதவுகள் திறப்பு
அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 9, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 பிரதான நீர்த்தேக்கங்களில் 4 மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 ஆகியவற்றின் வான்கதவுகள் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றின் மதகுகள், கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதான நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் மூன்று மற்றும் மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதான நீர்த்தேக்கங்களில் இரண்டு தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு, புத்தளம் மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்கள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களில் நான்கு மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகியவை திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத்துறை தெரிவித்துள்ளது.
நீரின் அளவு குறைவு
மேலும், சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் வெளியேற்றப்படும் நீரின் அளவு மிக குறைவு என்றும், எதிர்காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறக்கும் அளவு மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் குறித்த அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிப்பது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan