மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச: சாகர காரியவசம் தெரிவிப்பு
மொட்டுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமலே மீண்டும் களமிறங்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜனாபதி வேட்பாளராக நாமல்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடியே இறுதியான மற்றும் உறுதியான முடிவை எடுக்கும்.” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்கி படுதோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan