இலங்கையில் பிரம்மிக்க வைத்த சம்பவம் - தெய்வாதீனமாக தப்பிய வேன்
ஜா-எல தொடருந்து கடவையில் இருந்து மினுவாங்கொட நோக்கிச் சென்ற வேன் ஒன்று, பாரிய தொடருந்து விபத்தில் இருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில், ஜா எல தொடருந்து கடவையில் தண்டவாளத்தில் வேன் சிக்கிக் கொண்டது.
வேனின் சக்கரங்களில் ஒன்று தண்டவாளத்தில் சிக்கிய நிலையில் அதனை விடுவித்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
தெய்வாதீனமாக தப்பிய வேன்
சிக்கிய சக்கரத்தை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தும் அதே இடத்தை நெருங்கி வந்தது.

எனினும் வேனுக்கு அருகில் நின்ற ஒருவர் தொடருந்து பாதையில் முன்னோக்கி ஓடி தொடருந்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்தார்.
அதற்கமைய, தொடருந்தின் வேகத்தைக் குறைத்து தொடருந்தை நிறுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றன.
மேலும் சிக்கிய வேனிற்கு சுமார் ஒன்றரை அடி தூரத்தில் தொடருந்தை நிறுத்த முடிந்ததால் நொடிப்பொழுதில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri