சற்றுமுன்னர் சி.ஐ.டியில் முன்னிலையானார் நாமல்! குவிந்துள்ள பெருமளவு ஆதரவாளர்கள்
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.


முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்றைய தினம் ( 03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிஐடி உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், முன்னதாகவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிஐடி உறுதிப்படுத்தல்
இதன்படி, நாமல் ராஜபக்ச இன்று முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிஐடி உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான "கெஹெல்பத்தர பத்மே" உடனான தொடர்புகள் குறித்த விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவும் சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.