மட்டக்களப்பில் பத்மநாபா 35 ஆவது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு
பத்மநாபா 35 ஆவது தியாகிகள் தினத்தையிட்டு மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு நேற்று (06) நடைபெற்றுள்ளது.
பத்மநாபா மக்கள் முன்னணி மகிழடித்தீவு அமைப்பின் ஏற்பாட்டில் யூன் 19 தியாகிகள் தினத்தின் 35 ஆவது நினைவேந்தல் மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் சோலையூரான் என்று அழைக்கப்படும் ஜோதி தோழரின் அனுசரணையுடன் முன்னணி அமைப்பின் செயலாளர் ஜே. வினோ காந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நினைவேந்தல்
இந்த நினைவேந்தலில் அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் முனிசாமி உதயராஜ், சமூக செயல்பாட்டாளர் தோழர் சுகு, சமூக செயல்பாட்டாளர் தோழர் செங்கதிரோன் கோபால கிருஷ்ணன் , மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஆலைய தலைவர், உறுப்பினர்கள் ,மகிழடித்தீவு விளையாட்டு கழக உறுப்பினர்கள், மகிழடித்தீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு அம்பாறை பத்மநாபா மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல் செயளாலர் தோழர் சலீம், முன்னணி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தோழர் பத்மநாபாவின் திரு உருவ படத்திற்கு மலர் அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் நலிவுற்ற குடும்ப பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் 200 பேருக்கும் நிதி உதவியும், உயர்தரபரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மண்முனை தென்மேற்கு பிரதேச மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்கான நிதி உதவிகள் வழங்கி வைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

