தமிழ்நாடு அரசியலின் பிரதியாக ரணிலின் கைது - சஞ்ஜீவ எதிரிமான்ன
1990-2000 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசியலில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்களை 2015ஆம் ஆண்டு ரணில்.மைத்திரி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒன்றிணைந்து இலங்கையில் நடைமுறைப்படுத்தினர்.
அவ்வாறான ஒரு செயற்பாட்டுக்கு ரணிலே இன்று இறையாகிவிட்டார் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“1990-2000 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசியல் இரண்டு முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
அரசாங்கத்தின் முக்கிய கடமைகள்
இக்காலத்தில் இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன. மு. கருணாநிதி ஆட்சியில் ஜெ. ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததும், ஜெ. ஜெயலலிதாவின் ஆட்சியில் மு. கருணாநிதி சிறையில் அடைத்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த எடுத்துக்காட்டை இலங்கையில் ஒன்றிணைந்து ரணில் தலைமையில் அன்று அநுரகுமார திஸாநாயக்க செயற்படுத்தினார்.
அவ்வாறான ஒரு செயற்பாட்டை ரணிலின் கைதில் நான் காண்கிறேன். அத்தோடு ஒரு அரசாங்கத்தின் முக்கிய கடமைகள் மூன்றுள்ளது. தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் மக்கள் நிவாரணப் பணி.
இந்த முக்கிய பணிகளில் இருந்து அரசு விலகி வேறு காரணிகளில் முழு மூச்சாக செயற்பட்டால் அவை நாட்டின் இறைமைக்கும் எதிகாலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நெருக்கடியையும் ஏற்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



