அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாதம் என ரஷ்யா கடும் குற்றச்சாட்டு

Russo-Ukrainian War Ukraine World Russia
By Amal Jul 14, 2026 10:28 PM GMT
Report

ரஷ்யாவின் தானிய ஏற்றுமதியில் கால் பகுதிக்கும் மேல் கையாளும் முக்கிய வழித்தடமான அசோவ் கடலில், உக்ரைன் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் ட்ரோன் படைகள் ஒரே இரவில் 5 எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 5 சரக்குக் கப்பல்கள் உட்பட 11 ரஷ்ய கப்பல்களைத் தாக்கியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் அசோவ் கடலில் உக்ரைனால் தாக்கப்பட்ட ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

70 வருட வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த அதிசயம் - சிறைச் செல்லப்போகும் தமிழ்த் தலைவர்கள்

70 வருட வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த அதிசயம் - சிறைச் செல்லப்போகும் தமிழ்த் தலைவர்கள்

உக்ரைனின் நோக்கம் 

இந்த தொடர் தாக்குதல்களால் அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இது கடற்கொள்ளையர்களை விடவும் மோசமான, தூய்மையான பயங்கரவாதம் என்று சாடியுள்ளார்.

அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாதம் என ரஷ்யா கடும் குற்றச்சாட்டு | Ukraine Attack The Sea Azov Russia Accuses

சேதத்தை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்துவதே உக்ரைனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள உக்ரைன் இராணுவம், தாங்கள் ரஷ்யாவின் போர் திறனை வலுப்படுத்தும் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்கள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை திசைதிருப்பவே இத்தகைய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த மோதல் காரணமாக அசோவ் கடல் வழியாக மேற்கொள்ளப்படும் தானிய ஏற்றுமதியை கருங்கடல் (Black Sea) அல்லது பால்டிக் கடல் (Baltic Sea) துறைமுகங்கள் வழியாக மாற்று வழித்தடத்தில் கொண்டு செல்ல ரஷ்யாவின் விவசாய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தற்காலிக போக்குவரத்து சிக்கல்கள் இருந்தாலும், வெளிநாட்டு கூட்டாளிகளுக்கான தானிய ஏற்றுமதி கடமைகளை ரஷ்யா முழுமையாக நிறைவேற்றும் என்று ரஷ்ய தானிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.

அநுர அரசை கவிழ்க்க திட்டம் - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சவால்

அநுர அரசை கவிழ்க்க திட்டம் - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சவால்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US